வெளியேறிய ரஷ்யா; மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தில் உக்ரைன் மக்கள்

உக்ரேனின் ஹெர்சன் (Kherson) வட்டாரத்தில் இருந்து ரஷ்யா அதன் படைகளை மீட்டுக்கொண்டமை உக்ரேனியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் கீவ்வில் மக்கள் திரண்டு அதனைக் கொண்டாடி வருகின்றனர்.

ரஷ்யப் படைகள் ஹெர்சன் வட்டாரத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தலைநகருக்கு வந்துள்ளதாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் கூறினர்.

வெளியேறிய ரஷ்யா; மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தில் உக்ரைன் மக்கள் | Outgoing Russia People Of Ukraine In Celebration

 

ரஷ்யா அதிகம் குறிவைத்திருந்த ஹெர்சன் வட்டாரத்தில் இருந்து தனது படைகளை முழுமையாக மீட்டுக்கொள்வதாக அறிவித்தது.

அதன் பிறகு காணொளி வழி உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உரையாற்றினார். உக்ரேனியச் சிறப்புப் படைகள் ஹெர்சனில் உள்ள நிலையில், தற்காப்புப் படைகள் கூடிய விரைவில் அங்குச் சென்றடைந்துவிடும் என அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.