தனலட்சுமிக்கு பளார்னு அரை தான் கிடைக்கும்.. பிக் பாஸில் அதிர்ச்சி கமெண்ட்
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6ம் சீசன் தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தினமும் சண்டை சச்சரவு என சென்று கொண்டிருக்கிறது.
தினமும் சண்டை தவிர எதுவும் entertainment இல்லை என்பதும் தற்போது ஷோ பார்க்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து சலிப்பை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் இன்று கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பல கேள்விகள் கேட்டிருக்கிறார். ஸ்வீட் கடை டாஸ்கில் போட்டியாளர்கள் சண்டை போட்டுக்கொண்டது பற்றி அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தனலக்ஷ்மிக்கு பளார் என அரை கிடைக்கும்
மேலும் போட்டியாளர்கள் பற்றி வந்த கமெண்டுகள் தொடர்பாக ஒரு டாஸ்க் கொடுத்து இருக்கிறார் கமல்.
அமுதவாணன் காமெடி செய்கிறேன் என பர்சனலாக அட்டாக் செய்கிறாரா என முதலில் கேட்க பலரும் ஆமாம் என கூறினார்கள். அதன் பின் தனலட்சுமி பற்றி ஒரு கமெண்ட் வந்தது.
‘பிக் பாசில் செய்வது போல தனலட்சுமி வெளியில் செய்தால் பளார் என அரை தான் கிடைக்கும்’ என கமெண்ட் வந்ததை கேட்டு தனலட்சுமி ஷாக் ஆகிறார். அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இடம்பெற்று இருக்கிறது.
BY RMTM
கருத்துக்களேதுமில்லை