சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் – ரஷ்யாவின் உடனடி பதில்!

இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய கண்டனங்கள் வெளிப்பட்டுள்ள அதேநேரம், உலகின் உணவு நெருக்கடிக்கு பாதுகாப்பை வழங்கும் தீர்வுகள் அலசப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று ஜி20 மாநாட்டில் மெய்நிகர் வழியில் உரையாற்றிய உக்ரைனின் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் - ரஷ்யாவின் உடனடி பதில் | Russia Ukraine Live News Zelenskky Push Peace G20

இன்று ஆரம்பித்த ஜி20 உச்சிமாநாட்டில் தனது அமைதித் திட்டத்தை முன்வைத்த உக்ரைனிய அதிபர் அதில் அணுசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, ரஷ்யாவின் போர்க்குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் மற்றும் ரஷ்யாவுடனான இறுதி சமாதான ஒப்பந்தம் உட்பட்ட 10 அம்சங்களை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

அத்துடன் ரஷ்யாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களை கைவிடச் செய்யவேண்டுமானால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியின் மீதான விலை வரம்பை நடைமுறைப்படுத்த ஜி20 நாடுகள் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் வொலோடிமிர் செலென்ஸ்கியின் முன்மொழிவுகள் குறித்து உடனடியாக பதிலளித்த ரஷ்யா, உண்மையில் உக்ரைனுக்குத் தான் பேச்சுவார்த்தைகளை நடத்த நாட்டமில்லை எனத் தெரிவித்துள்ளது.

 

 

உக்ரைன் தரப்பின் நடைமுறைகள் அது உண்மையில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ள ரஷ்ய அதிபரின் பேச்சாளர், ரஷ்யா தனது சிறப்பு இராணுவ நடவடிக்கையின் இலக்குகளை தொடர்ந்து அடையுமென்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே ஜி20 மாநாட்டின் முடிவுரை அறிக்கை நாளை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.