லிஸ்ட் வெளியானதும் ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. அந்த 3 வார்த்தை கேப்ஷன் தான் ‘செம’ வைரல்!! IPL 2023
கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது.
கடந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே அரை இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தி இருந்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி.
இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று கேரளாவில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பது குறித்தும், எந்தெந்த வீரர்களை விடுவித்துள்ளார்கள் என்பது குறித்தும் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பிராவோ, ராபின் உத்தப்பா (ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டார்), ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், க்றிஸ் ஜோர்டன், பகத் வர்மா, KM ஆசிப், நாராயண் ஜெகதீசன் ஆகிய 8 வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது.
அதே போல, ஜடேஜா தொடர்ந்து சிஎஸ்கே அணியில் நீடிப்பாரா என்பது குறித்து கடந்த சில தினங்களாகவே பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் அதிகம் பரவலாக இருந்து வந்தது. அப்படி ஒரு சூழலில், தற்போது சிஎஸ்கே அணி ஜடேஜாவை அணியில் தக்க வைத்துக் கொண்டது. இது தவிர, தோனி, டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ராயுடு, மொயீன் அலி, தீபக் சாஹர் உள்ளிட்ட பல வீரர்களை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. சிஎஸ்கேவை தவிர அனைத்து அணிகளும் இது போல தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், மீண்டும் சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்பட்ட ஜடேஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தோனியை வணங்கி நிற்பது போன்ற தனது புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த ரவீந்திர ஜடேஜா, “எல்லாம் நன்றாக இருக்கிறது” என குறிப்பிட்டு #RESTART என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ஜடேஜா சிஎஸ்கேவின் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், தொடரின் பாதியில் மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை