அதிபர் ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – அடுத்தாண்டு முதல் நடைமுறை..!
அடுத்தாண்டு முதல் அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் இணையம் ஊடாக மேற்கொள்ளப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
01.03.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் ஒன்லைன் மூலம் வழங்கும் முறையை கட்டாயமாக்கியுள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அந்தந்த பெறுநர்களுக்கான பண மானியங்கள் மற்றும் பொதுமக்களால் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதற்கான கொடுப்பனவுகள் உட்பட அனைத்தும் அடங்குவதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
தேவையான சட்ட மாற்றங்கள்
அரச நிறுவனங்கள் அந்தச் சேவைகளுக்கான ஒன்லைன் கட்டணங்களைச் செயற்படுத்தும் திட்டத்தைத் தயாரிக்கவும், தேவையான சட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக, தற்போது அமைச்சுக்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப சேவை அதிகாரிகளிடம் தேவையான உதவியை நாட வேண்டும் என அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையில் அதிபர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை