சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை!!
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் 17/11 வியாழக்கிழமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பரிசோதனை நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும் கோப்பாய்,தென்மராட்சிப் பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஐரூல் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது பொலிஸ் அணிவகுப்பு,வாகன பரிசோதனை,பொலிஸாருக்கான விஷேட வகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன
கருத்துக்களேதுமில்லை