இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்த மக்கள்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர்.

பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்த மக்கள் | Earthquake In Indonesia

 

இந்தநிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக அங்குள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.