திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுருவின் தொலைபேசி பதிவுகள் குறித்து விசாரணை?

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி பதிவு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இசுரு பண்டாரவிற்கும் மற்றொருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த உரையாடல் பதிவு தொடர்பாக இசுரு பண்டாரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் உரையாடல் பதிவு சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற உரையாடல் அல்ல என விசாரணைகளின்போது இசுறு பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடல் பதிவு தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.