நாட்டை வந்தடையவுள்ள ஒன்பது கப்பல்கள்! வெளியான பின்னணி

ஒன்பது கப்பல்கள்

அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் இலங்கைக்கு ஒன்பது கப்பல்கள் வருகை தரவுள்ளதாக கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை நேற்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளார்.

இலங்கை துறைமுகங்களை,உல்லாசப் பிரயாணிகளை அழைத்து வரும் ஒன்பது பயணிகள் கப்பல்கள் மார்ச் மாதத்திற்குள் வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மற்றுமொரு கப்பல்

நாட்டை வந்தடையவுள்ள ஒன்பது கப்பல்கள்! வெளியான பின்னணி | Nine Passenger Ships Arriving In Sri Lanka

கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பிற்குள் 880 பயணிகளுடன் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது.

அதேவேளை 3,000 பயணிகளுடன் நவம்பர் 28 ஆம் திகதி மற்றுமொரு கப்பல் வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுநோய், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சமீபத்திய எழுச்சி காரணமாக சுற்றுலாத் துறையில் சரிவு ஏற்பட்டதாகவும் ஆனால் தற்போது சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.