கியூ ஆர் முறைமை நீக்கப்படுமா..! அமைச்சர் வெளியிட்ட தகவல்
எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் முதல் கியூ ஆர் முறைமை நீக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் வெளியாகிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி
சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விதத்தில் இதுவரை அப்படியான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிபொருள் நெருக்கடியைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட கியூ ஆர் முறையானது, முழுமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வரையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை