பிரபல திரையரங்கில் லவ் டுடே படம் செய்த வசூல் சாதனை- டாப் லிஸ்டில் வந்த படம்
இளம் கலைஞர் மிகவும் தரமான படங்களாக இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்கள். அப்படி ஒரே ஒரு கான்செப்ட் வைத்து படத்தை இயக்கி, நடித்து இப்போது மக்களால் கொண்டாடப்படும் பிரபலமாக இருக்கிறார் பிரதீப்.
லவ் டுடே திரைப்படம் தான் இப்போது டாப் வசூல் செய்து வருகிறது.
காதலிக்கும் இருவர் தங்களின் போன்களை மாற்றிக் கொள்கிறார்கள், அதில் நடக்கும் கலாட்டா, சண்டை எல்லாம் தான் படமாக அமைந்துள்ளது. சத்யராஜ் மற்றும் ராதிகா இருவரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்கள்.
படத்தின் வசூல்
ரூ. 5 கோடியில் தயாரான இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த வருடம் வெளியான படங்களில் பிரபல திரையரங்கான ரோஹினியின் அதிக வசூல் செய்த படங்களில் லவ் டுடே டாப் 5ல் இடம்பெற்று விட்டதாக திரையரங்க உரிமையாளர் டுவிட் செய்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை