கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்கவிற்கு பிணை – ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள்
பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரனி முன்வைத்த பிணைமனு கோரலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான 20க்கு 20 உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரரான தனுஷ்க குணதிலக்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்க குணதிலக்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை(17) பிணை வழங்கியது.
வெளியான புகைப்படங்கள்
தனுஷ்க பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் வெளியான சில புகைப்படங்களை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த புகைப்படங்கள் தனுஷ்க குணதிலக்க நேற்று (22) ஈஸ்ட்வுட் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியபோது எடுக்கப்பட்டவையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிணை நிபந்தனைகளின் படி அவர் தினமும் காவல் நிலையத்தில் முன்நிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை