அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா: கொண்டாட்ட விடுமுறை அறிவித்தார் சவுதி மன்னர்!

உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அணி அசத்தியுள்ளது.

அர்ஜென்டினா-சவுதி அரேபியா மோதல்

கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி, சவுதி அரேபிய அணியை திணறடித்து, கோல் அடிப்பதற்கான சிறப்பான வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கினர்.

 

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா: கொண்டாட்ட விடுமுறை அறிவித்தார் சவுதி மன்னர்! | Fifa World Cup Football Saudi Arabia Won Argentina

ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி-யை பயன்படுத்தி அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி அசத்தலான கோல் அடித்தார்.

கோல் விகிதத்தை சமன் செய்து, பதிலடி கொடுக்கும் முனைப்பில் சவுதி வீரர்கள் போராடியும் முதல் பாதியின் இறுதி வரை சவுதி அரேபியா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனது.

இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

இரண்டாம் பாதியில் மிரட்டிய சவுதி

முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் இரண்டாம் பாதி முழுவதும் சவுதி அரேபியா ஆதிக்கம் செலுத்தினர்.

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி அரேபியாவின் சலே அல்ஷெரி கோல் அடித்து அசத்த, ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் சலேம் அல்தாவசாரி கோல் அடித்து மிரட்டினார்.

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா: கொண்டாட்ட விடுமுறை அறிவித்தார் சவுதி மன்னர்! | Fifa World Cup Football Saudi Arabia Won Argentina

இதனால் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றதுடன், போட்டியில் விறுவிறுப்பு கூடியது.

அர்ஜென்டினா அணியால் ஆட்டத்தின் இறுதி வரை சவுதி அரேபியாவின் கோல் கணக்குகளை முறியடிக்க முடியாததால் சவுதி அரேபியா அணி 1 கோல் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவில் நாளை கொண்டாட்ட விடுமுறை

கால்பந்து அணியில் சிறந்த அணியாக கருத்தப்படும் அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா அணி தோற்கடித்ததால் அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் குதித்து வருகின்றனர்.

 

 

 

இதற்கிடையில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக சவுதி அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், நாளை நாட்டில் கொண்டாட்ட விடுமுறையை சவுதி மன்னர் அரேபியா சல்மான் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.