உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: ஜேர்மனியை வென்றது ஜப்பான்
பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் முன்னாள் சம்பியனான ஜேர்மனை ஜப்பான் 2:1 கேர்லகளால் வென்றது.கத்தார் தலைநகர் தோஹாவின் கலீபா அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீரர் இல்காய் குண்டகான் முதலாவது கோலை புகுத்தினார்.இடைவேளையின் போது ஜேர்மனி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
எனினும், 76 ஆவது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் ரிட்ஸு டோவன் கோல் அடித்து, கோல் விகிதத்தை சமப்படுத்தினார்.
அதன்பின் 83 ஆவது நிமிடத்தில் டகுமா அசானோ, ஜப்பானின் இரண்டாவது கோலை புகுத்தி ஜேர்மனிக்கு அதிர்ச்சியளித்தார்.உலகக் கிண்ண போட்டிகளில் பதிவான மற்றொரு அதிர்ச்சிகரமான பெறுபேறு இது.
சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் ஜேர்மனி 11 ஆவது இடத்திலும் ஜப்பான் 24 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை