ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டினால் இந்த குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக தசுன் ஷானக பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், பெத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா,சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, தனஞ்சய லக்ஷான், கசுன் ராஜித, மகீஷ் தீக்ஷன, ப்ரமோத் மதுஷான், அசித்த பெர்னாண்டோ, அசேன் பண்டார மற்றும் லஹிரு குமார ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் தமக்கு ஓய்வு வழங்குமாறு பானுக ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது துபாயில் இடம்பெற்று வரும் டி10 போட்டிகளில் பங்குபெற்ற அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்ற சான்றிதழையும் வழங்க இலங்கை கிரிக்கெட் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.