பிரித்தானிய தலைநகரில் மாவீரர் நினைவு படகுப் பயணம்

தமிழர் தாயகத்துக்கு சமாந்தரமாக புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், பிரித்தானிய தலைநகரில் ஊடாக செல்லும் தேம்ஸ் நதியில்மாவீரர் நினைவு படகு பயணம் நடத்தப்பட்டுள்ளது.

 

பாரிய கார்த்திகைப்பூ வடிவ சிற்பம் மற்றும் தமிழீழ தேசிய கொடியை தாங்கிய இந்த படகில் நினைவு கூரல்வாசகம் ஒன்றும் பெரிய அளவில் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படகில் மாவீரர்களின் உறவினர்களும் பயணம் செய்திருந்தனர்.

 

இந்த படகு பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகால் பயணித்தபோது ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அதனை ஆர்வத்துடன் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.