கொழும்பில் ரயில் தடம்புரள்வு : கரையோரப் பாதையில் இயக்கப்படும் ரயில்களுக்கு இடையூறு

கொழும்பு கொம்பனி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் கொம்பனிவீதி நிலையத்திற்கு அருகில் ரயில் இன்ஜின் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதையடுத்து கரையோரப் பாதையில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இன்று (26) இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகவோ அல்லது இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் 47ஆவது ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.