கனடாவில் விபத்தில் சிக்கிய விமானம்..! 134 பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை

கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்று ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது.

134 பயணிகளுடன் பயணம் செய்த, ப்ளயர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது.

வான்கூவாரிலிருந்து வாட்டர்லூ நோக்கிப் பயணித்த இந்த விமானத்தை தரையிறக்கப்பட்ட போதே இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

திகில் அனுபவம்

கனடாவில் விபத்தில் சிக்கிய விமானம்..! 134 பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை | Flair Airlines Flight Overruns Landing At Airport

 

இந்தச் சம்பவம் தொடர்பில் கனேடிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ப்ளயார் விமான சேவை நிறுவனத்தின் F8 501 என்ற விமானத்தில் பயணம் செய்த பயணிகளே இந்த திகில் அனுபவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், பயணிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டுள்ளனர்.

புல்வெளிக்குள் தரித்து நிற்கும் விமானம்

கனடாவில் விபத்தில் சிக்கிய விமானம்..! 134 பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை | Flair Airlines Flight Overruns Landing At Airport

 

என்ன காரணத்தினால் இவ்வாறு விமானம் ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

விமானம் ஓடு பாதையை விட்டு விலகி புல்வெளிக்குள் தரித்து நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.