கட்டாரில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியளிக்கும் காரணம்

கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

6500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

வெளிநாடொன்றில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம் | 600 Sri Lankans Dead Qatar

இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 22 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுமாணப் பணியில் ஈடுபட்டிருந்த 6500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கார்டியன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், மாரடைப்பினால் அவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஊடகவியலாளர்களை தடுத்த அதிகாரிகள்

வெளிநாடொன்றில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம் | 600 Sri Lankans Dead Qatar

இது தொடர்பில் ஆராயச் சென்ற பிபிசி ஊடகவியலாளர்கள் குழுவை கட்டார் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.