மகாலட்சுமியுடன் இருக்கும் PHOTO-வை பகிர்ந்து ரவீந்தர் உருக்கமான பதிவு!
தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.
தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ரவீந்தர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “உன்னுடன் வாழும்போது உன்னை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்று நான் ஒரு போதும் கனவு காணவில்லை.
உன்னுடன் வாழ்வதற்கு ஒரு கனவும் தேவையில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்.. நீ கனவுக்கு அப்பாற்பட்டவள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை