அதிர்ச்சி கொடுத்த ஜெர்மனி அணி! – அடுத்த சுற்றுக்குள் நுழைந்த ஜப்பான்
உலக கிண்ண கால்ப்பந்து தொடரில் அடுத்த சுற்றுக்கான அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்த்திரேலியா, அர்ஜென்டினா, போலந்து, மொராக்கோ, குரோஷியா, ஜப்பான், ஸ்பெயின், பிரேசில் மற்றும் போர்த்துகல் ஆகிய 14 அணிகள், கத்தாரில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை 2022 இன் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
நேற்றையதினம் இடம்பெற்ற குழு F கான இரு போட்டிகளில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி அணிகள் வெற்றிபெற்றிருந்தன.
ஜப்பான் வெற்றி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி அணி அடுத்த சுற்றுக்கான தகுதியை இழந்து வெளியேறியது.
ஸ்பெயின் உடனான போட்டியில் ஜப்பான் வெற்றி கொண்டதன் மூலம் ஜெர்மனியின் வெளியேற்றம் உறுதியானது.
நான்கு முறை உலகக்கிண்ண மகுடம் சூடிய ஜெர்மனி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அத்தோடு ஆசிய சார்பில் ஜப்பான் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை