இலங்கையர்களின் அதிக நம்பிக்கையை வென்றவர் பட்டியலில் நந்தலால் ரணிலுக்கு இடம்

பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு இலங்கையர்களின் அதிக நம்பிக்கையை வென்றவர் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்புக்காக 1000 மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஒக்டோபர் 21 முதல் 31 வரை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வேறு நாட்டிற்கு இடம்பெயரத் தயார்

இலங்கையர்களின் அதிக நம்பிக்கையை வென்றவர் பட்டியலில் நந்தலால் ரணிலுக்கு இடம் | Sri Lankan Promise Winner List Sri Lanka Cbsl

இந்த கணக்கெடுப்புக்கு அமைய, “மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மக்களின் நம்பிக்கை வென்றவர் என்ற ரீதியில் 56.6 வீத  மதிப்பை பெற்று முதலிடத்தில் உள்ளார்.  இரண்டாவது இடத்தை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பிடித்துள்ளார். அவரது நம்பிக்கை 44.5 சதவீதமாகும்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், சந்தர்ப்பம் கிடைத்தால், 56.8 வீதமான இலங்கையர்கள் வேறு நாட்டிற்கு இடம்பெயர விரும்புவதாகவும் அவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 18-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 18-29 வயதுக்கு இடைப்பட்ட இலங்கையர்களில் 77.2 வீதமானவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு நாட்டிற்கு இடம்பெயரத் தயாராக உள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்களில் 45.4 வீதமானவர்கள் வேறு நாட்டிற்கு இடம்பெயரத் தயாராக உள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய நிதியத்தின் உதவி

இலங்கையர்களின் அதிக நம்பிக்கையை வென்றவர் பட்டியலில் நந்தலால் ரணிலுக்கு இடம் | Sri Lankan Promise Winner List Sri Lanka Cbsl

மேலும், “இந்த அறிக்கையின்படி, “60.5 சதவீதமான இலங்கையர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவை அங்கீகரித்துள்ளனர், அவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 18-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவார்.

இலங்கையில் 79.1 வீதமானவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த பொருளாதார நிலைமையை விட தற்போதைய பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.”என அறிக்கைமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.