சீனாவிற்கு ஐ.எம்.எப் விடுத்த கோரிக்கை பின்னனியில் வெளியான விபரம்
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க உலகின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
உலகின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, நெருக்கடி சூழ்நிலைகளை சமாளிக்க கடனாளி நாடுகளுக்கு எவ்வாறு உதவியை துரிதப்படுத்தலாம் என்பதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அதன் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“அடுத்த வாரம் சீன அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் போது இந்த விடயம் குறித்து விவாதித்து மிகவும் பொருத்தமான தீர்விற்கான பொதுவான பொறிமுறையை ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறோம்.
பொதுவான உடன்பாடு
வளர்ந்து வரும் சந்தைகளில் 25% மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60% கடன் நெருக்கடியில் உள்ளன. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இந்த நிலைமையைத் தீர்க்க பல திட்டங்களை முன்வைத்தன.
இந்த முன்மொழிவுகளில் ஒன்று கால இடைவெளியுடன் பொதுவான உடன்பாட்டை எட்டுவது. இலங்கை போன்ற நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இவ்வாறான பொதுவான பொறிமுறையை விரிவுபடுத்துவதன் மூலம் நாம் விரைவாகச் செயற்பட வேண்டும்” என கூறினார்.
இதற்கிடையில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில், உலகின் ஏழை நாடுகள் இருதரப்பு கடனாளிகளுக்கு 62 பில்லியன் டாலர்கள் கடன்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 35% வளர்ச்சியாகும்.
அலி சப்ரி ,சமந்தா பவர் சந்திப்பு
அந்த கடனில் 3/2 பங்கு சீனாவிடம் இருப்பதாக உலக வங்கியின் தலைவர் கூறினார். இதேவேளை, அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர், அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிலையத்தின் தலைவர் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் வொஷிங்டனில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அந்த நிறுவனத்திடம் இருந்து இலங்கைக்கு மேலதிக ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை