ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை குறிவைத்து துப்பாக்கி சூடு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் மேட்கொண்ட துப்பாக்கி தாக்குதலால் பாதுகாப்பு வீரர் ஒருவர் மரணித்துள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியதோடு . இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
தாக்குதல் பின்னணி
தூதரக தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பது யார் என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் தூதரை கொல்லும் முயற்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது தூதர் எவ்வித காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தற்கொலை படை தாக்குதல்
இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரின் அலுவலகம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தாக்குதல் ஹெக்மத்யாரை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளதோடு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
கருத்துக்களேதுமில்லை