இனப் பிரச்சினைக்கு தீர்வு..! 12ம் திகதி பேச்சுவார்த்தை – ரணில் அதிரடி நடவடிக்கை

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சு எதிர் வரும் 12ஆம் திகதி நடைபெறும் என்று அதிபர் தரப்புக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல் அறிய வருகின்றது.

இதனிடையே, வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு கிடைத்த ஆதரவு வாக்குகளான 137 வாக்குகளையும் தக்கவைப்பதற்கும் அவர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இனப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு வருமாறு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த அதிபர், அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டுவதற்கு திட்டம் உள்ளதாக கடந்த நவம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றியபோது ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முதலாவது கூட்டம் 12ஆம் திகதி

 

 

இனப் பிரச்சினைக்கு தீர்வு..! 12ம் திகதி பேச்சுவார்த்தை - ரணில் அதிரடி நடவடிக்கை | A Solution To The Racial Problem Speech 12Th

இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கான முதலாவது கூட்டம் வரும் 12ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது, கடந்த வாக்கெடுப்பின்போது பெறப்பட்ட 137 ஆதரவு வாக்குகளையும் தக்கவைப்பதற்கான முயற்சிகளையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க எடுத்து வருகிறார் என்று கூறப்படுகின்றது.

இதன் ஓர் அங்கமாக தீர்வுக்கான பேச்சையும் அவர் பயன்படுத்த முனைகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.