பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகவே அல்லது மின்னஞ்சல் மூலமாகவே அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏதேனும் மேன்முறையீடு இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
42, 519 மாணவர்கள் அனுமதி
க.பொ. த உயர் தர 2021(2022) பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் 2,36,035 பேரும், தனியார் பரிட்சார்த்திகள் 36,647 பேருமென மொத்தம் 2,72,682 பேரும் தோற்றி இருந்தனர்.
இதில் 1,71,497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்த பட்ச தகுதிகளை பெற்றிருந்தனர்.
அவ்வாறு பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்தபட்ச தகுதியைப் பெற்றுக் கொண்டவர்களில்1,49,946 பேர் பாடசாலை மாணவர்களாவர்.
இவர்களில் 21,551 தனியார் பரீட் சார்த்திகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இப்பரீட்சை முடிவுகளின் படி அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 42, 519 மாணவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை