யாழ் தமிழர்களுக்கு கனடாவில் நடந்த அவலம்..! மகன், மகளைத் தொடர்ந்து தாயும் பலி (படங்கள்)

கனடா – மார்க்கம் நகரில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்து பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார்.

இந்த விபத்து ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு யாழ்ப்பாணத்து சகோதரர்கள் உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

யாழ் தமிழர்களுக்கு கனடாவில் நடந்த அவலம்..! மகன், மகளைத் தொடர்ந்து தாயும் பலி (படங்கள்) | Accident Canada Jaffa Family Mother Also Died

மூன்று பேர் பயணித்த காருடன் பாரஊர்தி மோதியதில் காரின் சாரதியான 21 வயதான இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

முன் இருக்கையில் பயணித்த மூன்றாவது பயணியான 52 வயது பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி பலி

யாழ் தமிழர்களுக்கு கனடாவில் நடந்த அவலம்..! மகன், மகளைத் தொடர்ந்து தாயும் பலி (படங்கள்) | Accident Canada Jaffa Family Mother Also Died

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கடந்த புதனன்று மரணமடைந்தார்.

இந்த வாகன விபத்தில் Vaughan நகரைச் சேர்ந்த 46 வயதான பார ஊர்தி ஓட்டுநர் மீது ஏற்கனவே மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

யாழ் தமிழர்களுக்கு கனடாவில் நடந்த அவலம்..! மகன், மகளைத் தொடர்ந்து தாயும் பலி (படங்கள்) | Accident Canada Jaffa Family Mother Also Died

மேலும் இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் எதிர் கொள்ளவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.