சுற்றுலா விசாவில் பணிக்காக மலேசியா செல்ல முயன்ற 9 பேர் கைது

மலேசியாவுக்குச் சென்ற 14 இலங்கையர்களைக் கொண்ட குழு தொடர்பில் மேற்கொண்ட சோதனையின் போது, ​​சுற்றுலா விசாவில் தொழில் நோக்கத்திற்காகப் பயணித்த ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இருந்த போதே குறித்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏர் ஏசியா விமானத்தில் நான்கு பெண்களும் ஐந்து ஆண்களும் மலேசியாவிற்கு இந்த மோசடியை மேற்கொண்ட நபர்களால் அனுப்பப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விரிவான விசாரணைகளை அடுத்து இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பல் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.