நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாள் அமர்வு இன்று லண்டன் ஹரோ நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அப்பால் இன்று மாலை முக்கியமான ஒரு பக்கவாட்டு அமர்வு லண்டன் வெஸ்ற்மினிஸ்ரர் மையமண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

 

தமிழர் தாயகத்தில் நிலஅபகரிப்பு, பௌத்த ஆக்கிரமிப்பு உட்பட்ட விடயங்களை ஆய்வு செய்யும் இந்த அமர்வு இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்திருந்தது.

 

இரவு 9.30 மணிவரை வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் பிரபல சட்டவாளர் அன்ரனி றீகன் தாயகத்தில் சென்றுள்ள திருமலை ஆயர் வணக்கத்துக்குரிய ஜோயல் இமானுவல், தவத்திருவேலன் சுவாமிகள் மற்றும் இந்திய சமதாக கட்சியின் பொதுச் செயலாளர் கோன் உட்பட்ட பிரமுகர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை முதல் ஹரோ நகர மண்டபத்தில் நாடு கடந்த தமிழீழ நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாள் அமர்வு நடந்திருந்தது. நாளை இறுதி அமர்வு இடம்பெறவுள்ளது.

தமிழீழத்தின் உணவுப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவுக்கொள்கை சவால்கள் என்ற கருப்பொருளில் இந்த கூட்டத் தொடர் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.