52 அரச நிறுவனங்களினால் 8600 கோடி ரூபாய் நஷ்டம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த 420 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வியாபார நிறுவனங்கள் 52 பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சின் சமீபத்திய அறிக்கைகள் காட்டுகின்றன.

அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் 52 அரச நிறுவனங்களின் வருடாந்த நஷ்டம் சுமார் 8600 கோடி ரூபாய் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவைக்கு தெரிவிக்கும் வகையில், உரிய நிறுவனங்களின் பட்டியலையும், அவற்றால் ஏற்பட்ட நஷ்டம் குறித்த முழு விவரங்களையும் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடும் நஷ்டத்தில் உள்ள நிறுவனங்களை விரைவாக மறுசீரமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.