கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினர் விசாரணை!!
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினர் இன்றைய தினம் மூன்றாவது நாளாககிளிநொச்சியில் விசாரணைகளை மேற்கொண்டனர்.இன்றைய தினம் 80 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் குறித்த விசாரணை இடம்பெற்று வருகிறது. 2000ம் ஆண்டுக்கு பின்பு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்களையும் அழைத்து வந்து தமது விசாரணைகளை முன்வைக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய சாட்சியங்களோடு வருகை தந்து தமது கருத்துக்களை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பதிவு செய்தனர்.
கருத்துக்களேதுமில்லை