வெளிநாட்டு பல்கலையில் கல்விகற்க செல்லும் மாணவருக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையை பிராந்திய கல்வி கேந்திர நிலையமாக மாற்ற முடியும் எனவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்காக 3 பில்லியன் டொலர் செலவிடப்படும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டக் குழு விவாதத்தின்போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்காக 3 பில்லியன் டொலர் செலவிடப்படும் எனவும் வெளிநாட்டு மாணவர்களை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்வதற்கு10 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்

சைபர் தொழில்நுட்பத்திற்கான பல்கலைக்கழகங்கள்

வெளிநாட்டு பல்கலையில் கல்விகற்க செல்லும் மாணவருக்கு மகிழ்ச்சியான தகவல் | Sri Lankan Students Going To Foreign Universities

இதுவரையில் இருந்த கல்வி முறையை மாற்றியமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும், உலகளாவிய தேவைக்கு ஏற்ப பௌதீக பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி சைபர் தொழில்நுட்பத்திற்கான பல்கலைக்கழகங்களையும் நிறுவுவதற்கு தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.