ராஜபக்சவினருடன் இணையாது நாட்டைக் கட்டியெழுப்ப தயார் – சஜித் பிரேமதாச
பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை விடுத்து குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதற்கான சிறந்த அணி ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாகவும் சரியான சிந்தனை,சரியான வேலைத்திட்டம் மற்றும் நிலையான தத்துவம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மேற்கூறிய அனைத்து பலத்தையும் பயன்படுத்தி இந்த நாட்டைக் கட்டியெழுப்பத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டுக்கான சேவை
ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தேர்தல் தொகுதி கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாட்டுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதை குறுகிய காலத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்டியுள்ளது. ஹுஸ்ம (மூச்சு) மற்றும் சக்வல (பிரபஞ்சம்) திட்டங்கள் இதற்கு சிறந்த உதாரணம்.
கோட்டாபய ராஜபக்ச நீட்டிய கரட் அல்லது முந்திரி துண்டுகளை சாப்பிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாரில்லை.
அதிபர், பிரதமர் பதவி
நாட்டின் நலனுக்காக அதிபர், பிரதமர் பதவிகளை ஏற்பதற்கு நிபந்தனைகள் விதித்தது நாட்டுக்காகவேயாகும்.
முழு நாடுமே #GoHomeGota என்று கூறும் போது அதனை அங்கீகரித்து கண்டியில் இருந்து கொழும்பு வரை ஐந்து நாட்களாக #GoHomeGota என்ற கோஷத்துடன் பாத யாத்திரை போராட்டம் மேற்கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு ராஜபக்சவினருடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியாது” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை