40 பேரின் உயிரை காப்பாற்றிய பேருந்து சாரதி..! நொடிப்பொழுதில் நிகழ்ந்த சம்பவம்

பதுளை நோக்கி பயணித்த பேருந்திற்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை சாரதியின் திறமையால் காப்பாற்றப்பட்டுள்ளது.

நேற்று காலை ஸ்பிரிங்வேலி பகுதியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இபுல்கொட தும்பிலியாவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 1000 அடி உயரமான பள்ளத்தில் இருந்து கீழே விழவிருந்தது.

எனினும் அந்த சந்தர்ப்பத்தில் சாரதியின் சாமர்த்தியத்தால் நொடிப்பொழுதியில் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டு 40 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.பேருந்து கவிழ்ந்திருந்தால் கீழே உள்ள வீடுகள் மீது விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.