கொட்டுகிறது டொலர் மழை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஓரளவு ஸ்திரமான நிலைக்கு வரும் நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை ஒவ்வொரு மாதமும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொட்டுகிறது டொலர் மழை - மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு | Its Raining Dollars

இதேவேளை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதத்தில் 59,759 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதுடன், இது ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 வீத அதிகரிப்பு என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கொட்டுகிறது டொலர் மழை - மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு | Its Raining Dollars

இந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் 628,017 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை சராசரியாக 1991 ஆக காணப்பட்டதுடன், ஒக்டோபர் மாதத்தில் 1355 ஆக காணப்பட்டது. மேலும், 2021 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களில் 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துடன், 273.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.