யோகாசனம் செய்து இணையத்தை கலக்கும் “வாளமீன்” மாளவிகா.. வைரல்
நடிகர் அஜித் நடித்த ‘உன்னை தேடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை மாளவிகா.
‘உன்னைத்தேடி’, ’ஆனந்த பூங்காற்றே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா, பின்னர் மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் வெளியான வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் பாடலில் நடனம் ஆடி பிரபலமானவர்.
மாளவிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஐயா, வெற்றி கொடி கட்டு, வியாபாரி, மச்சக்காரன் அற்புத தீவு, நான் அவன் இல்லை, மாயகண்ணாடி, மணிகண்டா, சபரி, திருமகன், குருவி, ஆயுதம் செய்வோம் ஆகிய படங்கள் மாளவிகா நடித்துள்ள முக்கிய திரைப்படங்கள்.
மாளவிகா, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுடனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரது இயற்பெயர் ஸ்வேதா கோனூர் (Shweta Konnur).இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, சமீபத்தில் கிராபி தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது யோகா செய்யும் வீடியோ & புகைப்படங்களை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உடலை சமநிலைபடுத்துதல் என்பது தேடி கிடைப்பதில்லை. அது உருவாக்கப்படுவது” என தலைப்பிட்டு புகைப்படங்களை மாளவிகா வெளியிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை