முதியவரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.
சாவகச்சேரி நிருபர்
கடந்த சில தினங்களாக சாவகச்சேரி பஸ் தரிப்பு நிலையத்தில் அநாதரவாக இருந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த முதியவர் சாவகச்சேரி பஸ் தரிப்பு நிலையத்தில் சில தினங்களாக இருந்த நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்திருப்பதாகவும்-முதி யவர் வாய் பேச முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை