மொட்டு கட்சி அமைச்சர்களுக்கு ரணில் அதிரடி உத்தரவு
நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு உண்மையைக் கூறுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஏற்பாட்டில் ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கான சிநேகபூர்வ சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிராமங்களில் கிளைச் சங்கங்களை உருவாக்கி, கிராமப் பொறிமுறையை பலப்படுத்துமாறும், நாட்டின் நிலைமை குறித்து மக்களுக்கு உண்மையைக் கூறுமாறும் அதிபர், அவர்களுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றங்கள் காரணமாக மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இதனால் நாளாந்த உணவுத் தேவைகளுக்கே மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதனால், அவர்கள் ஆட்சியாளர்கள் உட்பட அரசியல்வாதிகள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்களுக்கு நாட்டின் உண்மை நிலைமை எடுத்துக்கூறுமாறு அதிபர், ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை