ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவானின் மறுபக்கம்!
பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ஒருவர் ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட சம்பவம் தற்போது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் அட்ரியானோ என்பவரே, உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பிரான்ஸ் அணிக்காக தெரிவாகாமல் போனதை மறக்க ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்கு ஆயிரக்கணக்கான தொகையை செலவிட்டதாக தெரியவந்துள்ளது.
ஆனால், முன்னாள் காதலியான Micaela Mesquita என்பவரை மீண்டும் சந்தித்த பின்னர், அட்ரியானோ இரவு நேர விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்களை மொத்தமாக ஒதுக்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டதுடன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை உறுதியும் செய்துள்ளனர். ஆனால் திருமணம் முடிந்து வெறும் 24 நாட்களில் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக திட்டமிட்டிருந்த இரவு விருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
40 வயதான அட்ரியானோ சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான பிரேசில் அணியின் உலகக் கோப்பை ஆட்டத்தை தமது நண்பர்களுடன் கண்டுகளிக்க தெற்கு பிரேசிலில் உள்ள பென்ஹா பகுதிக்கு சென்றுள்ளார்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்னரே, குடியிருப்புக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தம்பதியிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், அட்ரியானோ உடனான அனைத்து புகைப்படங்களையும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து Mesquita நீக்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 21 வயதான Ceu Oliveira என்பவரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் மார்ச் மாதம் இருவரும் பிரிவதாகவும், திருமணம் செய்துகொள்ளும் முடிவை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை