நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா புடினின் ஆயுள் காலம் – ரஷ்ய உளவாளி அதிர்ச்சித் தகவல்

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், அவ்வப்போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் உடல்நிலை குறித்த தகவல்களும் வேகமாக பரவிவருகின்றன.

கடந்த சில மாதங்களாக, புடினின் கண்பார்வை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், புடின் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அல்லது அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வந்தவாறே இருக்கின்றன.

அதைத் தொடர்ந்து, சமீபத்திய காணொளிகளில்  சுயமாகக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவருக்கு கை கால்கள் நடுங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா புடினின் ஆயுள் காலம் - ரஷ்ய உளவாளி அதிர்ச்சித் தகவல் | Putin Slipped Stairs Home Led Involuntary

ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருவதாகவும், இதனால் புடினின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் இங்கிலாந்து ஊடகமான The Independent இல் பணிபுரியும் ரஷ்ய உளவாளி ஒருவர் அதிர்ச்சித் தகவலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரது உத்தியோகபூர்வ மாஸ்கோ இல்லத்தில் புடின் மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அவர் விழுந்தபோது அவருக்கு கட்டுப்பாடின்றி மலம் வெளியேறியதாகவும் நியூயோர்க் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.

புற்றுநோயானது அவரது வயிறு மற்றும் குடலைப் பாதித்ததால் மலம் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு இந்த தகவல்கள் எதையும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.