ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம்!

யாழ்.பருத்தித்துறை நகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.

வரவு செலவு திட்டத்தினை இன்றைய தினம் திங்கட்கிழமை தவிசாளர் இருதயராஜா சபையில் முன்வைத்தார். அதனை அடுத்து நடைபெற்ற விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போதே ஒரு வாக்கினால் தோற்கடிப்பட்டது.

15 உறுப்பினர்களை கொண்ட சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 6 பேரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த தலா ஒரு உறுப்பினருமாக 8 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம்! | Jaffna Point Pedro Urban Council Budget Voting Sl

அதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 4 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என 7 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் வரவு செலவு திட்டத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.