கனடா மற்றும் ஆஸ்திரேலியாயை தொடர்ந்து நியூஸிலாந்து அதிரடி நடவடிக்கை!
Alphabet Inc இன் Google மற்றும் Meta Platforms Inc போன்ற பெரிய ஒன்லைன் டிஜிட்டல் நிறுவனங்கள், நியூசிலாந்து ஊடக நிறுவனங்களின் செய்பாடுகளுக்கும், உள்ளூர் செய்திகளுக்கும் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை நியூஸிலாந்து அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ள இதே போன்ற சட்டங்களின் மாதிரியாக இந்த சட்டம் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை நியூசிலாந்து ஒலிபரப்பு அமைச்சர் வில்லி ஜாக்சன் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், தெரிவித்துள்ளார். உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை எட்டுவதற்கு டிஜிட்டல் தளங்களுக்கு இது ஒரு ஊக்கமாக செயல்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக சிறிய பிராந்திய மற்றும் சமூக செய்தித்தாள்கள், ஒன்லைனில் அதிக விளம்பர நகர்வுகள் கொண்டுள்ளதுடன் நிதி ரீதியாக லாபகரமாக இருக்க போராடுகின்றன என்று ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தங்கள் செய்தி உள்ளடக்கத்திலிருந்து பயனடைபவர்கள் உண்மையில் அதற்கு பணம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும் என தெரிவித்த அவர், கடந்த தசாப்தத்தில் ஊடகவியலாளர்களில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“கடந்த 10 ஆண்டுகளில் 50 சதவீத பத்திரிகையாளர்களை நாம் இழந்திருக்கிறோம். அங்குள்ள சிறிய ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக இந்தச் சட்டத்தை முன்வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை