மாய காற்றாக மாறும் தமிழருக்கான தீர்வு – நம்பிக்கை இழந்த சம்பந்தனுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ரணில்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண நாம் தயாராக உள்ளோம். அதற்கு முதற்கட்டமாக மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ள அனைத்து கட்சிகளுடனும் விரைவில் சந்திப்புக்களை நடத்தவுள்ளோம் எனவும் தெரிவித்தள்ளார்.
அண்மையில், தமிழ் மக்களுக்கு பேச்சு மூலமான தீர்வு என்பது மாய காற்றாக மாறிக்கொண்டிருக்கும் கனவு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியிலும் முழுமையாக நம்பி ஈடுபட்ட ஒருவர், இவ்வாறு நம்பிக்கை இழந்து, கருத்தை வெளிப்படுத்தியுள்ள சூழலில், அது தொடர்பில் ஊடகங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்தகால மனக் கசப்புகளை பேசிக் கொண்டிருப்பதால் காலம் தான் வீண்விரயமாகும். வெளியாரின் தலையீடு இல்லாமல் நாம் ஒன்று கூடி பேச்சு மூலம் தீர்வை அடைவோம்.
அதன் மீது நம்பிக்கை வைத்து தமிழ் தலைவர்கள் செயற்பட வேண்டும். இதில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
கடந்தகால கசப்பு விடயங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை. தேசியப் பிரச்சினையை, வெளியாரின் தலையீடு இன்றி , நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி தீர்க்க வேண்டும்” என தமிழ்த் தலைவர்களுக்கு ரணில் ஆலோசனை முன்வைத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை