14 வயது மாணவனுக்கு கிடைத்த பல்கலை அனுமதி..! வெளியான விபரம்

2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்

 

 

14 வயது மாணவனுக்கு கிடைத்த பல்கலை அனுமதி..! வெளியான விபரம் | University Admission For 14 Year Old Student

இவர் 8ம் வகுப்பில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதி 6 மாதங்களுக்கு பின், 9ம் வகுப்பில் க.பொ.த உயர் தர வணிகவியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

இதற்கமைய உயர்தர பிரிவில் இவர் மூன்று B சித்திகளை பெற்றுள்ளார். இதன்படி அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.

இதன் காரணமாக தேவும் சனஹாஸ் ரண்சிங்கவை ஊர்வலமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று(05.12.2022) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேவம் குருகுல வித்தியாலயத்தில் படித்த அவர் அதன் பின்னர் நானமல் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த மாணவன் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் மூத்தவர் எனவும் அவரின் பெற்றோர் ஆசிரியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.