அநுராதபுரம் பிரதேசத்தில் 3 விபசார விடுதிகளை நடத்திய கொமாண்டோ படையின் முன்னாள் சிப்பாய் கைது!

அநுராதபுரம் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இரகசியமான முறையில்  மூன்று விபசார விடுதிகளை நடத்தி வந்த கொமாண்டோ படையின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மாத்தளை சந்தி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே சுமார் 4 இலட்சம் ரூபா  பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம்  குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

42 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 170 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அநுராதபுரம் நகரிலுள்ள விபசார விடுதிகளிலும்  மசாஜ் நிலையங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக அந்த இடங்களுக்கு வரும் ஆண்களை இலக்கு வைத்து இந்த ஹெரோயின் போதைப்பொருள்  விற்பனை செய்யப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.