கத்தார் உலகக்கோப்பையில் தங்க காலணியை வெல்லப் போவது யார்? மெஸ்ஸிக்கு நெருக்கடி கொடுக்கும் வீரர்
ஃபிபா உலகக்கோப்பை தொடர் தற்போது காலிறுதி சுற்று நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் அதிக கோல்கள் அடிக்கும் வீரர் தங்க காலணி விருதை பெறுவர்.
அந்த வகையில் கத்தார் தொடரில் தங்க காலணி விருதை வெல்ல 5 வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், பிரான்ஸ் அணியின் இளம் வீரர் கய்லியன் பெப்பே 5 கோல்கள் அடித்து முன்னிலை வகிக்கிறார்.
அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி, ஸ்பெயினின் அல்வரோ மொராட்டா, இங்கிலாந்தின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட், பிரான்ஸின் ஒலிவியர் கிரௌட், நெதர்லாந்தின் கோடி காக்போ ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்துள்ளனர்.
அர்ஜென்டினா காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில் மெஸ்ஸி கோல்கள் அடித்து பெப்பேவை முந்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே சமயம், போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ இதுவரை ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளதால், வரும் 7ஆம் திகதி நடக்கும் ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான போட்டியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
கருத்துக்களேதுமில்லை