தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடுகின்றது..

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடுகின்றது.

இன்று முற்பகல் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து பங்காளி அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவித்தன.

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. 

ஒருமித்த கருத்துடன் இறுதி முடிவு..! கூடுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு | Tna Held On A Meeting Today

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.