நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
அஹெலியகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹொரகொட நீரோடையின் மேல்பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பில் அஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் அஹலியகொட வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளன.
கருத்துக்களேதுமில்லை