வரவு -செலவு திட்டம் நிறைவேறியது
2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எதிராக 80 வாக்குகளும் ஆதரவாக 123 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய இருவரும் வாக்களிக்கவில்லை.
நிதி அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கடந்த மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை