வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது மாடியில் இருந்து கீழே வீழ்ந்து மரணம்

வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் பணியாற்றும் வேலைத்தளத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வவுனியா, குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41 வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்ற நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னிணைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வேலைத்தளத்தில் நேற்றையதினம் (08.12) பணியாற்றிக் கொண்டிருந்த போது மூன்றாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.